பொட்டல்காடு

இங்கே எல்லாமும் விளையும்

சும்மா..ஒரு விளம்பரம்....


த்திரிகையில் இருந்து சினிமா பி.ஆர்.ஒ வாக நான் புலம் பெயர்ந்தது அப்படியொன்றும் திட்டமிட்டு நடந்ததில்லை.பத்திரிகையில் சேர்வதுக்கு முன்பு வேறொரு அடையாளம் தேடி சென்னைக்கு வந்தவன்.அதனாலேயே எப்போதும் என்னை, நான் சார்ந்த தொழிலில் முன்னிலைப்படுத்திகொள்ள விரும்பியதில்லை!

இயக்குனர் ஷங்கர் சார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ரெட்டைச்சுழி' படத்துக்கு நான்தான் பி.ஆர்.ஒ.அதுகூட அந்தப்படத்தின் இயக்குனர் தாமிரா வாங்கிகொடுத்த வாய்ப்பு.பாலசந்தர்,பாரதிராஜா,ஷங்கர் என திரையுலகின் மூன்று ஜாம்பவான்கள் சங்கமிக்கிற இடத்தில் நானும் இருக்கிறேன் என்பது தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பதிவு.அதற்கு காரணமாக இருந்த தாமிராவுக்கு நன்றி.

அந்தப்படத்தில் என் துணைவி சந்திரா கோ டைரக்டராக வேலை பார்த்திருக்கிறாள்.கூடவே கார்த்திக்ராஜா இசையில் ஒரு பாட்டு எழுதுகிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'நானென்று சொல்...இல்லை நாமென்று சொல்...இந்த நாடகம் இன்றே முடித்துவிடு...'என்று போகும் அந்த பாட்டு.அதுபோக படத்தில் வரும் 'பட்டாளம் பாருடா 'என்று தொடங்கும் பாடலில் என் செல்ல மகள் பௌஷ்யாவும் சில குழந்தைகளோடு சேர்ந்து பாடியிருக்கிறாள்.அதற்காக அவள் வாங்கிய முதல் சம்பளமான ஆயிரம் ருபாயை என்னிடம் கொண்டுவந்து கொடுத்து சந்தோஷத்தில்...அவள் ராத்திரி எல்லாம் தூங்காமல் இருந்தது தனிக்கதை.

கடந்த பதினைந்தாம் தேதி ரெட்டைச்சுழி  படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா ஐஸ்வர்யாராய்பச்சன் தலைமையில் சீறும் சிறப்புமாக நடந்து முடிந்தது.ஊருக்கே தெரியும்.நிகழ்ச்சி முடிந்த அடுத்தநாள் ஒரு ஆடியோ சி.டியை என் மகளிடம் நேரடியாக கொண்டு வந்து கொடுக்க ஆசைப்பட்டான் தாமிரா.காரணம் என் மகள் முகத்தில் பூக்கும் புன்னகையை அவன் நேராக பார்க்க வேண்டும் என்பதுதான்.என் மகளை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை பீத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவனோட மகளுக்கும் பௌஷ்யா என்று பேர் வைத்திருக்கிறான் என்பதைவிட வேறொன்றும் சொல்வதற்கில்லை.


வீட்டுக்கு வந்தான் அம்மா ஒரு டீ கொடுங்க என்று என் மாமியாரிடம் கேட்டு வாங்கி குடித்தான்.பௌஷ்யாவை அருகில் அழைத்து சி.டியைக்கொடுத்தான்.நன்றி சொல்லி கண்கலங்கிப்போனாள் என் செல்லக்குட்டி.நன்றிடா தம்பி என்று நானும் நெகிழ்ந்து நெக்குருகிப்போனேன்."அக்கா பேரு வந்திருக்கு பாரு" என்று என் மகன் அபினவிடமும் அதைக் காட்டினான்.அபினவ் இரண்டாவதுதான் படிக்கிறான்.

அவன் என்னை மாதிரி ஊர்வன,பறப்பன என்று எல்லாத்தையும் வெளுத்துகட்டுவான்.குட்டிப்பையன் என்பதால் எங்கள் வீட்டில் எல்லாருமே அவனுக்கு அந்த சலுகையை கொடுத்திருக்கிறார்கள்.அவனும் கவலையே படாமல் சாப்பிட்டு கொஞ்சம் குண்டூஸ் ஆகிட்டான்.இந்த வயதில் குழந்தைகள் அப்படித்தான் இருப்பார்கள் எங்கள் வீட்டில் சொல்லி வைத்திருக்கிறேன்.

தாமிரா அவனிடம் அப்படி சொன்னதும் அவன் முகம் மட்டும் வாடிவிட்டது.என் துணைவி சந்திராவின் தோளில் சாய்ந்து முகம் புதைத்துகொண்டான்.அமைதியாக கடந்தது சில நிமிடங்கள்.தாமிரா விடை பெற்றுக்கொண்டு  போயிருந்தான்.என் மகன் அபினவ் சந்திராவின் தொழில் சாய்ந்திருந்த தருணத்தில் அவளிடம் ஒரு தகவலை ரகசியமாக பதிவு செய்திருக்கிறான்.
என்ன?"

'அம்மா...இனி நான் கொஞ்சமா சாப்பிடறேன்...கிரவுண்டுல பிராக்டிஸ் பண்ணி...உடம்பை குறைச்சிடறேன்...உன் படத்தில் என்னையும் நடிக்க வை..அப்போதான் என் பேரும் இதுமாதிரி வரும்'என்பதுதான்.

அவனுக்கு நடிப்பு ஆசை வந்ததுக்கு இரண்டு காரணம்...நானும் என் துணைவியும் சார்ந்திருக்கிற துறை. அப்புறம் சந்திரா இயக்கவிருக்கிற படத்துக்கான ட்ரைலரில் ஹீரோ குழந்தையாக இருக்கிற காட்சிகளில் அவனைத்தான் நடிக்க வைத்திருக்கிறாள்.

 
ட்ரைலரை பார்த்த அத்தனைபேரும் சந்திராவின் படைப்பை பாராட்டிவிட்டு...உங்க பையன் பிரமாதமாக நடிச்சிருக்கான் என்பார்கள்.அது அவனுக்குள் ஆழமாக பதிந்து விட்டதென்று நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக...பத்திரிகை,சினிமா என்று கடந்து
வந்திருக்கிறேன்....ஆறுவயது குழந்தைக்குள் இருக்கும் ஆசைகளும்,கனவுகளும் தெரியாமலே!?

10 கருத்துகள்:

//இருபது ஆண்டுகளாக...பத்திரிகை,சினிமா என்று கடந்து வந்திருக்கிறேன்....ஆறுவயது குழந்தைக்குள் இருக்கும் ஆசைகளும்,கனவுகளும் தெரியாமலே!? //


நம்மை நாமே அறிவதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது. இதற்கு யாரை குற்றம் சொல்ல? இப்போதுதான், குழந்தைகளின் கனவுகளை அறிய நானும் ஆரம்பித்திருக்கிறேன்.

சந்திரா பாடல் உயிரை உருக்குகிறது. இப்படியொரு பாடலை நானும் எழுதிவிட வேண்டும் என்கிற ஆசையும் (பொறாமையும்)இருக்கிறது.

நல்லாருக்குஜி. வாழ்த்துகள்.

 

குழந்தைகளுக்கு எனது வாழ்த்துக்கள் சுந்தர்..!

 

//நம்மை நாமே அறிவதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது. இதற்கு யாரை குற்றம் சொல்ல? இப்போதுதான், குழந்தைகளின் கனவுகளை அறிய நானும் ஆரம்பித்திருக்கிறேன்.//

எங்கள் தலைமுறையில் முதல் முறையாக பள்ளிகூடத்துப்பக்கம் ஒதுங்கியது என் தலைமுறைதான்.என் மக்கள் இன்னும் கொஞ்சம் அடுத்த கட்டத்துக்கு போக முயற்சிக்கிறார்கள்.எனக்கான ஆங்கில அறிவையும்,இந்தியையும் என் மகளே சரிசெய்கிறாள்.இதுவே நமக்கான வெற்றிதான்.

//சந்திரா பாடல் உயிரை உருக்குகிறது. இப்படியொரு பாடலை நானும் எழுதிவிட வேண்டும் என்கிற ஆசையும் (பொறாமையும்)இருக்கிறது.
நல்லாருக்குஜி. வாழ்த்துகள்.//

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி! ஏக்ஜி.

என் தலைவன் இளையராஜா சொன்னதுபோல்...இந்த பிரபஞ்சத்தில் உயிரினம் முதலில் உணர்வது சத்தம்தான்.காற்றில் கலந்திருக்கும் இசையை பிரித்து உணர்வது இசை.புல்லாங்குழலில் காற்றை நிரப்புகிறோம்...துளைகளின் பயன்பாடு இசையாகிறது.அதுபோலதான் இதுவும்.உங்கள் புல்லாங்குழலிலும் காற்றை நிரப்புங்கள்..எங்கள் காதுகள்...காத்திருக்கிறது !

 

//குழந்தைகளுக்கு எனது வாழ்த்துக்கள் சுந்தர்..!//

நன்றி தமிழா..உண்மைத்தமிழன் என்று யாரும் கிடையாது .தமிழன் உண்மையானவன்..

 

வாழ்த்துக்கள் பாஸ்..!

 

//இருபது ஆண்டுகளாக...பத்திரிகை,சினிமா என்று கடந்து வந்திருக்கிறேன்....ஆறுவயது குழந்தைக்குள் இருக்கும் ஆசைகளும்,கனவுகளும் தெரியாமலே!? //

ஆழமா‌ன வரி‌கள்‌. ரொ‌ம்‌ப ரசி‌ச்‌சே‌ன்‌ தலை‌வா‌. எல்‌லா‌ம்‌ சந்‌தோ‌ஷம்‌. அந்‌த கடை‌சி‌ படத்‌தி‌ல்‌ இடது ஓரத்‌தி‌ல்‌ இருக்‌கி‌ற நபர்‌தா‌ன்‌....

அந்‌தணன்‌

 

//இருபது ஆண்டுகளாக...பத்திரிகை,சினிமா என்று கடந்து வந்திருக்கிறேன்....ஆறுவயது குழந்தைக்குள் இருக்கும் ஆசைகளும்,கனவுகளும் தெரியாமலே!?

ஆழமா‌ன வரி‌கள்‌. ரொ‌ம்‌ப ரசி‌ச்‌சே‌ன்‌ தலை‌வா‌. எல்‌லா‌ம்‌ சந்‌தோ‌ஷம்‌. அந்‌த கடை‌சி‌ படத்‌தி‌ல்‌ இடது ஓரத்‌தி‌ல்‌ இருக்‌கி‌ற நபர்‌தா‌ன்‌....

அந்‌தணன்‌//

//நன்றி குரு...அது எதுக்குன்றதை எழுத்தில் பதிவு செய்யமுடியாது.//

 

//வாழ்த்துக்கள் பாஸ்.//

//நன்றி பாஸ்..நீங்கள் யாரென்பது குறித்து தகவல் இல்லை.இருந்தாலும் உங்கள் வருகை ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.//

 

சுந்தர் படிக்க நெகிழ்வாக இருந்தது.நகரமும் சினிமாவும் நம்மை இன்னும் தொலைந்து போகாமல் வைத்திருக்கிறது.அன்பான வாழ்த்துக்கள்.

 

//நகரமும் சினிமாவும் நம்மை இன்னும் தொலைந்து போகாமல் வைத்திருக்கிறது//
//நன்றி அண்ணா...உங்கள் பதிவை படிக்கிறேன்.